Friday, March 15, 2013

நண்பர் சி.செந்தில்குமார் கணினி அறிவியல் ஆசிரியர் அவர்கள் முதல்வருக்கு அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியர் நியமன கோரிக்கை

வணக்கம்.மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் பகுதி நேர சிறப்பாசியர்கள் நியமன அரசாணை (G.O.Ms.No.177 School Education (C2) Department Dated 11.11.2011) பிறப்பிக்கப்பட்டு அதன் மூலம்  B.Sc.(Comp. Sci.), B.Ed. பட்டம் பெற்ற சி.செந்தில்குமாராகிய நான் SSA மூலம் அரசு நடுநிலை/உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளிலுள்ள 6 முதல் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்திடும் வகையில் அரசின் திட்டத்தின்படி கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வள மையம் புடையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர கணினி அறிவியல் பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறேன்.தினமலர் புதுச்சேரி பதிப்பில் 28.2.13 தேதிய தினசரி நாளிதழில் 2ம் பக்கத்தில் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10 வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில்  அறிமுகப்படுத்த உள்ளதாகவும், கணினி அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளதாகவும், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்துள்ளதாகவும், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், இத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது கணினி அறிவியில் பாடப்பிரிவைச் சேர்ந்த எங்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது.தற்போதைய சூழலில் நடுநிலை, உயர்நிலை,மேனிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பகுதி நேர கணினி அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்களின் நலனை ஊக்கும் விக்கும் வகையில் பணிபுரிந்துவரும் பள்ளிகளின் இடங்களை அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களாக கருதி எங்களை உள்ளபடியே  நியமனம் செய்தால் எங்களின் எதிர்காலம் வளம் பெறும் என்பது இதயதெய்வம் சரித்திர முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் கையில்தான் உள்ளது என்பதை வணங்கி வேண்டுகிறோம்.

Cuddalore Part Time Teachers Meeting